வகைப்படுத்தப்படாத

சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த ரஷ்ய ஜனாதிபதி

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

அவனுக்கு ரஷ்ய ஜானதிபதி புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். ஜனாதிபதி புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.

 

 

 

 

Related posts

ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

Peradeniya Uni. Management Faculty to reopen next week