உள்நாடு

சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணரும் கைது

(UTV | கொழும்பு) –  கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நவம்பர் 21ம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரம்

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

“தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்” ஹஜ் வாழ்த்தில் உலமா சபை