சூடான செய்திகள் 1

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமாவுக்கு கிடைத்த தண்டனை

(UTV|COLOMBO)-ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 09 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமா வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சில வருடங்களாக மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையை இழந்து பாட்டியின் பொறுப்பில் வசித்து வந்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு முன்னால் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன், தற்போது சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு