சூடான செய்திகள் 1

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

(UTVNEWS|COLOMBO) – திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 23 வயதுடைய சந்தேக நபருக்கு இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்

துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாதம் கர்ப்பிணியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் குறித்த சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தந்தையின் பராமரிப்பிலே குறித்த சிறுமி இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வீதி விபத்துக்களால் ஒருநாளைக்கு சராசரி 8 பேர் உயிரிழப்பு

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு