கிசு கிசு

சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் இங்கு இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

அதில் நாட்டுக்கு சேவை செய்ய அரசாங்கத்தில் சேருமாறும், எனது அழைப்பை எந்தவொரு சிறுபான்மை கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை கட்சிகள் எங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை வளர்ப்பதில் பங்காளிகளாக இருக்க முடியும், அதில் எவ்வித தடையுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் வழங்கப்பட மாட்டாது, என பிரதமர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

சில சிறுபான்மை கட்சிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்திருந்தன, ஆனால் அவர்களில் யாரும் இதுவரை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்தகைய கோரிக்கை ஏதேனும் இருந்தால், நாங்கள் அவர்களை அரசாங்கத்தில் தங்க வைப்போம், ஆனால் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப அல்ல, எமது நிபந்தனைக்கு எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர், அதனால் எங்களுக்கு யாரும் விதிமுறைகளை கட்டளையிட முடியாது எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைப்புச் செய்தி

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் – ஹகீம் தரப்பு மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை..

Related posts

பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?

ஊரடங்கு நீக்குவது தொடர்பில் இன்னும் பச்சை சமிஞ்ஞை இல்லை