சூடான செய்திகள் 1வணிகம்

சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேற்று பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது