வகைப்படுத்தப்படாத

சிறிகொத்த தலைமையத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட கான்ஸ்டபிலுக்கு அங்கொடயில் சிகிச்சை

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த தலைமையத்தின் இலட்சினை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவற்துறை கான்ஸ்டபில் எதிர்வரும் 29ம் திகதி வரை  மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிரிஹான காவற்துறையில் பணிபுரியும் 40 வயதுடைய இந்த காவற்துறை கான்ஸ்டபில் கடந்த முதலாம் திகதி இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் பிற்பகல் 5.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார்.

சந்தேகநபரை அங்கொடை மனநல மருத்துவமனையில் வார்டு இலக்கம் 21இல் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நீதவான் இதன் போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

450 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஹட்டன் ரயில் நிலையம்.மற்றும் நவீன கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்!: கையை சுட்டுக்கொண்ட ‘தெரசா மே’

இன்றைய தினம் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்