விளையாட்டு

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது பாபர் அசாமுக்கு

(UTV |  லாஹூர்) – கடந்த ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார்.

27 வயதான பாபர் அசாம் விருதுக்கான ஓட்டப் பந்தையத்தில் ஷாகிப் அல் ஹசன், ஜான்மேன் மலன் மற்றும் பால் ஸ்டெர்லிங் போன்றவர்களை வீழ்த்தி இந்த பெருமையை பெற்றுள்ளார்.

பாபர் அசாம் 2021 ஆம் ஆண்டில் ஆறு ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருக்கிறார்.

ஆனால் இந்த ஆண்டு பாகிஸ்தான் விளையாடிய இரண்டு தொடர்களிலும் அவர் முக்கிய பங்களிப்பைச் செய்தார். பாபர் அசாம் கடந்த ஆண்டு ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்களுடன் 67.50 சராசரியில் 405 ஓட்டங்களை குவித்துள்ளர்.

Related posts

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி