வகைப்படுத்தப்படாத

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு வீச்சு- 21 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டமாஸ் குஷின் புறநகரான கிழக்கு கவுட்டா கடந்த 2012-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அதை சிரியா ராணுவம் சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. சிரியா ராணுவத்துடன் ரஷிய போர் விமானங்கள் அதிரடி குண்டு வீச்சு நடத்தின. அதில் பதுங்கு குழிகளுக்குள் முடங்கி கிடந்த 556-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.

எனவே, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஐ.நா.வில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

சிரியா முழுவதும் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் அதை மீறி கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா மற்றும் ரஷியாவின் போர் விமானங்கள் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே குண்டு வீச்சில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போது கிழக்கு கவுட்டாவில் குளோரின் ரசாயன குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. ரஷியா மற்றும் சிரியா ராணுவம் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் இதை ரஷியா மறுத்துள்ளது. ரசாயன குண்டு வீச்சுக்கு சிரியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிரியாவும் ரசாயன குண்டு வீச்சை மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைப்பு

ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை

இலங்கை தேயிலையில் பூச்சி இல்லை