கேளிக்கை

சிம்புவின் ‘மாநாடு’ வருகிறது

(UTV|INDIA) – சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட ‘மாநாடு’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.

ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த படம் ட்ராப் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்
இதனையடுத்து சிம்புவின் தாயார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தில் மீண்டும் சிம்பு நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் ஜனவரி 20 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து கூறப்பட்டது இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முழு விவரங்கள் அதாவது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு தொடங்கும் அதிகாரபூர்வமான தேதியும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் சிம்புவின் ’மாநாடு’ படப்பிடிப்பு நடக்க விருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!

சினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன்