உள்நாடுவிளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

சிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது.

அதன்படி ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் T20 போட்டித் தொடரில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. T20 அணிக்கு வனிந்து ஹசரங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை T20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். பானுக ராஜபக்ச, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் T20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சிம்பாப்வே அணிக்கெதிரான T20 தொடருக்கான இலங்கை அணி வருமாறு…

வனிந்து ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
பெத்தும் நிஸங்க
குசல் மென்டிஸ்
சதீர சமரவிக்ரம
தசுன் சானக
ஏஞ்சலோ மெத்யூஸ்
தனஞ்சய டி சில்வா
மக்ஷீஷ் தீக்ஷன
நுவன் துஷார
குசல் ஜனித் பெரேரா
பானுக ராஜபக்ஷ
கமிந்து மெண்டிஸ்
மதீஷ பத்திரன
துனித் வெல்லாலகே
அகில தனஞ்சய
ஜெஃப்ரி வெண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
தில்ஷான் மதுஷங்க
துஷ்மந்த சமீர

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கரையோர வாழ் மக்கள் அவதானம்

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!