கேளிக்கை

சினிமா நடிகரை மணக்க மாட்டேன்- காஜல்

(UTV|INDIA)-சினிமாவில் ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கின் றனர். மேலும் சில ஜோடிகள் காதல் வலையில் விழுந்து எப்போது திருமணம் செய்துகொள்வது என்ற திட்டமிடலில் உள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கடும் ஆட்சேபனையை எழுப்பி உள்ளது. அவர் கூறும்போது, ‘திரைத்  துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து.

எனது வாழ்க்கைக்கு பொருத்தமான, என் மனத்துக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்ட வரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல். சில நடிகைகள் நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். காஜலை பொறுத்த வரை அதுபோன்ற கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியதில்லை.

நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தனது திருமணத்தையும் ஒத்தி வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக காஜலின் தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதுடன் ஒரு குழந்தைக்கு தாய் ஆகவும் ஆகிவிட்டார்.  காஜலையும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நெருக்கமான பாய்பிரண்ட் ஒருவரை காஜல் காதலிப்பதாகவும் தெரிகிறது.

 

 

 

 

Related posts

பிறந்தநாள் அன்றே பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி

‘ப்ரின்ஸ்’ தீபாவளியன்று வெளியாகும்