உள்நாடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பால்மா விலை தொடர்பில் நாளை தீர்மானம்

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்