சூடான செய்திகள் 1

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…

(UTV|COLOMBO) உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரையின் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த புதுவருடம் விகாரி என்ற பெயரை கொண்டு பிறக்கின்றது.

அதற்கமைய, வாக்கிய பஞ்சாங்கப்படி பிற்பகல் 1 மணி 12 நிமிடத்திலும், திருகணித பஞ்சாங்கப்படி பிற்பகல் 2 மணி 9 நிமிடத்திலும் பிறக்கிறது.

கைவிஷேடம் பிற்பகல் 1 மணி 36 முதல் பிற்பகல் 2 மணி 16 வரை உள்ளது.

விஷூ புண்ணியகாலம் காலை 9.12 முதல் மாலை 5.12 வரை உள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56