உள்நாடு

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைபிடிக்கவும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,363 ஆகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

 

Related posts

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

மக்கள் இறந்தபோது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை – ஜனாதிபதி ரணில்

editor

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்