உள்நாடு

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையின் பின்னர் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரித்திருந்தது. அதற்குக் காரணம், மக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியமையே என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவில் நானும் பழிவாங்கப்பட்டேன் – நாமல்

இன்று சுழற்சி முறையில் ஒரு மணித்தியால மின்வெட்டு

78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கையை நோக்கி யாத்திரை