சூடான செய்திகள் 1

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உபகுழு இன்று(02) இலங்கைக்கு

(UTV|COLOMBO) சித்திரவதைகளை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் உப குழு இன்று(02) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் நான்கு அதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுதந்திரம் வரம்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றமை தொடர்பில் சித்திரவதைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்புகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபரம்

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்