உலகம்

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை

(UTV | அமெரிக்கா) – டிசம்பர் 2006 ஏற்படுத்தப்பட்ட குவான்தனாமோ சிறை முகாம், உளவு துறையினர் தடுப்புக்காவலில் இருந்த கைதிகளுக்காக அமைக்கப்பட்டது.

முகாமிற்குள் எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த முகாம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமாக அடையாளம் காணப்பட்ட இந்த குவான்தனாமோ சிறையில், அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11, அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கைதிகளை விசாரணை செய்ய ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) சமீபத்தில் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேக நபர்களை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் குவாண்டனாமோ விரிகுடா சிறையை மூட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 2016 தேர்தல் பிரச்சார வாக்குறுதியின் ஒரு பகுதியாக குவாண்டனாமோ சிறைச்சாலை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முகாம்களை மூடுவதற்கு முயன்றார், ஆனால் அதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் எட்ட முடியவில்லை. அப்போது ஜோ பைடன் துணை அதிபராக இருந்தார்.

2001 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” தொடர்பான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா குவாண்டனாமோ விரிகுடா முகாமைத் திறந்து வைத்தது. கியூபாவின் கிழக்கு முனையில் அமெரிக்காவிற்கு சொந்தமான கடற்படை தளத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டது.

முகாம் 7 என்ற முகாமே இல்லை என்று அமெரிக்க இராணுவம் முன்பு மறுத்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா, கியூபாவில் குவாண்டனாமோ விரிகுடாவில் அமைத்த ரகசிய சிறைசாலையை மூட முடிவெடுத்துள்ளது. அதில் முகாம் 7-ல் வைக்கப்பட்டிருந்த கைதிகள் முகாம் 5 க்கு மாற்றப்பட்டனர்.

ஸ்பெயினியர்களுக்கு எதிரான போரில் அமெரிக்க அரசாங்கம் நாட்டிற்கு உதவிய நிலையில், 1903 ஆம் ஆண்டில் கியூபா, இந்த பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் – ரஷ்யா மோதல் : தயாராக நேட்டோ போர்விமானங்கள்

போலந்து நாட்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பெண்!

பேருந்து விபத்தில் 27 பேர் பலி – 20 பேர் காயம்