சூடான செய்திகள் 1

சிங்கப்பூரில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-சிங்கப்பூரில் இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவன பிரதானிகளுக்கு இடையிலான மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

40 நாடுகளின் சுற்றாடல்த்துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யேகுப் இற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக முன்கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள போதைப்பொருள் தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்-கல்வியமைச்சு

‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம்