கேளிக்கை

சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி (video)

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடி, சிங்கம் ஒன்றை வேட்டையாடி பின்னர் முத்தமிட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ‘சபாரி’ எனப்படும் காட்டுச் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன்-கார்லோன் கார்ட்டர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர். இதில் சிங்கம் ஒன்றை வேட்டையாடி உள்ளனர். பின்னர் இந்த சிங்கத்தின் உடலுக்கு பின்னே அமர்ந்துக் கொண்டு இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர்.

இதனை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வந்தது.

மேலும் நெட்டிசன்கள் பலரும் #StopLionHunting, #StopTrophyHunting என ஹேஷ்டாகுகளை உருவாக்கி புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

Related posts

தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல் விரைவில்

ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்