உள்நாடு

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சீகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

சிகிரியா பாறைக்கு அணுகு சாலை மேம்பாடு, மாற்று அணுகு சாலை அமைத்தல், சிகிரி அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபாவாகும்.

அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 27ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு