கேளிக்கை

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பூஜா தட்வா

(UTV|INDIA)-பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

நோய்யில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறார்.

 

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் அமைரா…

வெங்கட் பிரபு இயக்கத்தில் முத்தையா முரளிதரனா?

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…