உள்நாடுவிளையாட்டு

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”

(UTV | கொழும்பு) –

கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவத் தலைவர்கள் அமைப்பினால் தொடர்ச்சியாக 17வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு ஏழு பேர் கொண்ட நோலிமிட் சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி  முழுநாளும் குதிரைப்பந்தய சர்வதேச அரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி போட்டி சம்பந்தமாக நேற்று 28 கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் அதிபர் சட்டத்தரனி றிஸ்னி மரிிக்கார் தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது. இந் ஊடக மாநாட்டில் கொழும்பு சாஹிராக் கல்லுாரியின் பழைய மாணவத் தலைவர்கள் அமைப்பின் தலைவர் கலீல் ரஹ்மான், நோலிமிட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் பவாஸ் மற்றும் சப்ராஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.  நாட்டிலுள்ள 16 முன்னணி பாடசாலைகள் இக் கால்பந்தாட்ட விளையாட்டுப்போட்டியில 17வது முறையாக போட்டியில் பங்குபற்ற உள்ளன.
(1). அல் ஹிக்மா கல்லுாாி, கொழும்பு சாஹிராக் கல்லுாாி, ரோயல் கல்லுாாி, சென் தோமஸ், சென் ஜேசப், இசிப்பத்தனா கல்லுாாி, சென் பெணடிக் கல்லுாாி,  யாழ்மத்திய கல்லுாாி, கம்பொல சாஹிராக் கல்லுாாி, தாருஸ்ஸாம் கல்லுாாி, அலிதியா கல்லுாாி,  டி மெலோபெடக் கல்லுாாி,  கேட்வே கல்லுாரி, லைசியம் கல்லுாாி, மரிஸ்டெல்லாக ்கல்லுாரி, டி.பி. ஜாயாக் கல்லுாாி ஆகிய 16 பாடசாலை சிரேஸ்ட கனிஸ்ட மாணவர்கள் கலந்து இப் போட்டியில் குதிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்