வகைப்படுத்தப்படாத

சாலையில் கிகி நடனம் ஆடினால் கிடைக்கும் தண்டனை இதோ…

(UTV|INDIA)-கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் பாடியுள்ள ‘கிகி டூ யூ லவ் மி’ என்ற பாடலுக்கு ஆபத்தான நிலையில் நின்று கொண்டு நடனம் ஆடி இணைய தளத்தில் பதிவு செய்யும் சவால்களை பலர் செய்து வருகின்றனர்.

இதை ‘கிகி’ நடன சவால் என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் இதே போல் பலர் நடனம் ஆடி இணைய தளத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியாவிலும் நடிகைகள், பிரபலங்கள் என பலரும் இவ்வாறு செய்கின்றனர். இது, இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனால் இளம்பெண்கள், இளைஞர்கள் இந்த நடனத்தை ஆடுகின்றனர். குறிப்பாக ஓடும் காரில் இருந்து இறங்கி திடீரென நடனம் ஆடுவது, சாலையின் நடுவில் நின்று நடனம் ஆடுவது என்று ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர்.

பெங்களூருவிலும் இது போன்ற நடனங்களில் இளைஞர்கள் அடிக்கடி ஈடுபடுகிறார்கள்.

எனவே, பெங்களூரு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதில், “சாலைகளில் நின்று ‘கிகி’ நடனம் ஆடுவதால் உங்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். எனவே, இது சாலை விதிகளுக்கு மாறானது.

சாலை விதி மீறல் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி, சாலைகளில் அவர்கள் நடனம் ஆடினால் அவர்களை ஜெயிலில் தள்ளுவோம். அவர்கள் ஜெயிலில் சுதந்திரமாக நடனம் ஆட வசதிகளை ஏற்படுத்தி தருவோம்” என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கித்துல்கல வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி ஏறிச்செல்ல முற்பட்ட லொறி சுற்றிவளைப்பு

මොරටුව විශ්ව විද්‍යාලයේ හදිසි ගින්නක්

களுத்துறை மண்சரிவில் 37 பேர் பலி! – இரத்தினபுரியில் 28 மரணங்கள்!(படங்கள்)