கேளிக்கை

சார்லஸுக்கு கொரோனா என்னால் பரவவில்லை : இந்திய பாடகி அதிரடி

(UTV|இந்தியா) – இந்திய பாடகி கனிகா கபூர் மூலமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவலை கனிகா கபூர் தரப்பு மறுத்துள்ளது.

இலண்டனில் இருந்து மும்பை வந்த பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து, பல களியாட்ட நிகழ்ச்சிகளுக்கும் பாடகி கனிகா கபூர், சுற்றித் திரிந்து, பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்றும், இவை 2015ம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படங்கள் என்றும் பாடகி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள ‘வலிமை’ படக்குழுவினர்

மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை

ஸ்ருதிஹாசனுக்கு விமானத்தில் மீண்டும் நடந்த சோகம்!