வகைப்படுத்தப்படாத

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது

(UTV|INDIA)-பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார்.

‘சார்க்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 02 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று(27) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகை

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

Rishad Bathiudeen reassumes duties as Cabinet Minister of several key Ministries