உள்நாடு

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற 3 அலுவலகங்கள்

(UTV|COLOMBO) – சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கும், இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும் அவிசாவளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்றும் தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக நீர் கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

டயானா மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணை – மனு தாக்கல்