உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்

(UTV | கொழும்பு) –  சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டத்தின் கீழ் முதலாவது சாரதி அனுமதி பத்திர விநியோக பணிகள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரைப்பின் பேரில், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணியை இராணுவத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!