உள்நாடு

சாரதியை மிலேச்சத்தனமாக தாக்கும் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – மஹரகம – பன்னிப்பிட்டிய சந்தியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

++++++++++++++++++++++++    UPDATE
சாரதியை மிலேச்சத்தனமாக தாக்கும் பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் வைத்து நபரொருவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சீருடை அணிந்த போக்குவரத்து பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளமை புலப்படுகிறது.

மஹரகமை காவல்நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சாரதியொருவர் மீதே இவ்வாறு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மஹரகம ஹைலெவல் வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாரவூர்தி சாரதி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த சாரதி செலுத்திய பாரவூர்தி மஹரகம காவல்நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி மைத்திரிபாலவின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னரே மேற்படி பொலிஸ் அதிகாரி சாரதியை தாக்கியுள்ளார். குறித்த சாரதியின் பக்கம் தவறு இருக்கக்கூடும். எனினும் இவ்வாறான தாக்குதல்களை பொலிசார் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இது தொடர்பில் விசேட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

விமலின் கட்சியிடமிருந்து இன்று அரசியல் தீர்மானம்

“ஜனாதிபதி தேர்தலை நடத்த இடைக்கால தடை மனு: ரணில் வெளியிட்ட அறிவிப்பு”