அரசியல்உள்நாடு

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் கோரிக்கைக்கு அமைவாக, சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தோணா அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கான ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பேரில், அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 3.2 மில்லியன் பெறுமதியான செயற்றிட்டம் கடந்த மாதம் செய்யப்பட்டிருந்தத்து.

அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில், தோணா அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பமாக முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அதற்கான ஆலோசனைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா வழங்கினார்.

இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர், கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர பொறியியலாளர், சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் துறை சார் பொறியியலாளர்கள், உரிய திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர்g உட்பட பலரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிகழ்ச்சித் திட்டமானது விரைவில் பொது மக்களுக்களின் பாவனைக்காக நடைமுறைப்படுத்தபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Related posts

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

editor

மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்