உள்நாடுபிராந்தியம்

சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஹட்டனில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் இருவர் சாப்பிட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

ஹட்டன் நகரில் நேற்று (21) மாலை பிரபல உணவகத்தில் இருவர் பகல் உணவு சாப்பிட்டபோது உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.

இதன்காரணமாக ஹோட்டல் உரிமையாளருடன் குறித்த இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 119 இற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு, உடனடியாக இது தொடர்பில் ஹட்டன் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவனுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற நகரசபை பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனையின் பின்னர் உணவக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

விருந்துபசார நிகழ்வுகளை கண்டறிய சிறப்பு சோதனை

முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநரினால் காணி அனுமதிப்பத்திரங்கள் பொது மக்களிடம் கையளிப்பு!