உள்நாடுசூடான செய்திகள் 1

சாந்தன் மறைவு: யாழில் கறுப்புக் கொடி: உடல் கையளிப்பு

(Thangarajah Khandeepan)

மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான சாந்தன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது சடலம் நேற்றைய தினம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.  சாந்தனின் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. இந்தநிலையில் சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  சாந்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மேலும், சாந்தனின் இறுதிக் கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். (UTV-COLOMBO)

Related posts

மீனவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்- பியல் நிசாந்த

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்