உள்நாடு

சாதாரண தர பெறுபேறுகள் இன்று முதல் Online மூலம் வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)-  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை ஒன்லைன் (online) முறை மூலம் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் பரீட்சை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,

அதன்படி, அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பெயர் (USER NAME) மற்றும் இரகசிய குறியீடு (PASSWORD) வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தலைமையில் இன்று(28) பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் பரீட்சை பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு செயற்பட்ட பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், பரீட்சை ஆணையாளர் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஐந்து சேவை கட்டமைப்பின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்திகளுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் மாகாண மற்றும் வலய அதிகாரிககுக்கும் PDF மற்றும் EXEL மூலம் பெற்றுக்கொள்வதற்கு இதற்கமைவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இருபதுக்கு அமோக வெற்றி

சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கு

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்