உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்

(UTV | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“.. ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் பேர் அழகியல் கற்கைகளை தெரிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படவேண்டியுள்ளன. கொவிட்-19 பரவல் காரணமாக, செயன்முறை பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த செயற்பாடுகளில் இருந்தும் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது..” என கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம்