உள்நாடு

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய சேவை நாளை..!

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், காலி, குருணாகல், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாவட்ட காரியாலயங்கள் ஊடாக நாளை சனிக்கிழமை  (4) காலை 8.30 மணிமுதல் முற்பகல் 01 மணிவரை விசேட சேவைகள் வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைக்கு இதுவரை விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் அல்லது கிராம சேவகர் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டு முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தையும்,உரிய ஆவணங்களையும்  சமர்ப்பித்தல் வேண்டும்.

உரியத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் படிவத்தை  ஆட்பதிவு திணைக்களத்தின் www.drp.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்துக்குப் பிரவேசித்து பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

Related posts

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!