வகைப்படுத்தப்படாத

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

10 நாட்களுக்கு தொடர்ந்து இந்த பணிகள் இடம்பெறவுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 105 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 35000 இற்கும் அதிக மதிப்பீட்டாளர்கள் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்தார்.

இதேவேளை மதிப்பீட்டு பணிகளின் பாதுகாப்பிற்காக 200 இற்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

685,000 பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

JustNow: வெடுக்குநாரி சம்பவம்: அனைவரும் விடுதலை