விளையாட்டு

சாதனை படைத்த ரோஹித் சர்மா!

(UTV | கொழும்பு) –

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ரி-20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதுடன், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து முறை சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய மூன்றாவது ரி-20 போட்டியில் ரோஷித் 69 பந்துகளில், 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ரி-20 தொடரின் கடைசி போட்டியான இதில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரி – 20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும், தொடரின் ஆட்டநாயகனாக சிவம் டூபேவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor

மிக்கி ஆர்தர் இராஜினாமா

தில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு