உள்நாடு

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் !

(UTV | கொழும்பு) –

கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தினால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் XI ரீ10 சம்பியன் மற்றும் KSC T10 இரண்டாம் நிலை வெற்றி கிண்ணங்களை பெற்ற சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இளம் வீரர்கள் மற்றும் கழகத்திற்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தல் வேலைத்திட்டமும் கழகத்தின் முகாமையாளர் எம்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழக தலைவர் எம்.பி.எம். பாஜில் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழகத்தினுடைய பிரதித்தலைவரான சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய பிரதியதிபராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஏ.எம்.ஏ. நிஸார், கழகத்தின் ஊடக செயலாளர் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டமையை பாராட்டி விஷேட கௌரவிப்பும் இடம்பெற்றது. மேலும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மற்றும் சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவமும் இடம்பெற்றது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் சாய்ந்தமருது பொதுநிறுவனங்கள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பரீட் , சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், தொழிலதிபருமான ஏ.எல். உதுமாலெப்பை, தொழிலதிபர் யூ.எல். சப்ரி, கழக செயலாளர் ஏ.சி.எம்.நிஸார், கழக நிர்வாகிகள், கழக வீரர்கள், சாதனை சிறுமிகளின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.மேலும் மாலை சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்ற நட்புறவு கிரிக்கட் போட்டியில் முதல்பாதி முடிவுற்ற நிலையில் மழை குறுக்கிட்டமையால் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளையும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் இந்நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்

மீண்டும் எகிறும் கொரோனா – முகக் கவசங்கள் கட்டாயமாகிறது

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு