அரசியல்உள்நாடு

சவூதி தூதவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி

சவூதி அரேபிய தூதுவர் Khalid bin Hamoud bin Nasser Al-Qahtani மற்றும் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோருக்கு இடையில் நேற்று (08) சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

சவூதி அரேபிய தூதுவர் விடுத்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தூதுவருடன் நீண்ட உரையாடலில் ஈடுபட்ட திலித் ஜயவீர, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தியதுடன், கடந்த காலத்திலிருந்து சவூதி அரேபிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திய நல்லுறவை பாராட்டினார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்கும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சர்வஜன் அதிகாரத்தின் ஊடகச் செயலாளர் ஹசன் அலல்தீனும் கலந்துகொண்டிருந்தர்.

Related posts

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!