விளையாட்டு

சவூதி அரேபியா வெற்றியை சுவீகரித்தது

(UTV | கொழும்பு) –    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கிடையில் நடைப்பெற்ற போட்டியில் சவுதி அரேபியா வெற்றியை சுவீகரித்துள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா சிறப்பாக கோல் வாய்ப்புக்களை தக்கவைத்துக்கொண்டது. இருப்பினும் ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பான முறையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கமைவாக முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

அதனைத்தொடர்ந்து 02ஆம் பாதியில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியைச் சேர்ந்த சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனை எதிர்த்து தொடர்ந்தும் முயற்சி செய்தும் ஆர்ஜென்டினா கோல்களை அடிக்க முடியாது தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் போட்டி முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

Related posts

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு