உலகம்

சவூதி அரேபியாவும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு பணிப்பு

(UTV|சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக, பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச ஊழியர்களுக்கும் 16 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் இராணுவம் ஆகிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், உணவு விற்பனை நிலையங்கள், உணவு விநியோக சேவை மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றின சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் நேற்று(15) மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் நன்றியற்றதன்மைக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது – இம்ரான்

இந்திய ஜனாதிபதி வைத்தியசாலையில்

ஹெய்ட்டி பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு