உலகம்

சவுதி இளவரசர் மன்னரை கொல்லவும் திட்டமிட்டிருந்தார்

(UTV |  சவூதி அரேபியா) – சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொல்ல நினைத்ததாக முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியை சேர்ந்தவர் முன்னாள் புலனாய்வு அதிகாரி அல்ஜாப்ரி . இவர் உயிருக்கு அஞ்சி தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் அவர் பேசும்போது,

“சவுதி இளவரசர் குறித்து பல தகவல்கள் எனக்கு தெரியும் என்பதால் என்னைக் கொல்ல சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டிருக்கிறார். மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷ்யாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டப் பிறகு என்னைக் கொல்லவும் சதி நடந்தது. நான் கொல்லப்பட வேண்டும் என்று சல்மான் நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் இறக்குவரை அவர் அமைதியாக மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

அல்ஜாப்ரி தான் பணியில் இருந்தபோது பொருளாதார ரீதியாக குற்றத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் இக்குற்றச்சாட்டை கூறி இருக்கிறார் என்று சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவை தொடர்ந்து நிமோனியா தொடர்பில் WHO ஆராய்வு

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட ஜோ பைடன்