உலகம்

சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

(UTV | சவுதி அரேபியா ) – சவுதி அரேபிய மன்னர் சல்மான், மருத்துவச் சோதனைக்காக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

84 வயதாகும் மன்னருக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

2012ஆம் ஆண்டு அவர் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன்பு, சுமார் இரண்டரை ஆண்டுகள், அவர் பட்டத்து இளவரசராக இருந்தார்.

50 ஆண்டுக்கும் மேலாக ரியாத் வட்டார ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ஒத்திவைப்பு

டெல்லி விவசாயிகளுக்கு மியா கலீபா ஆதரவு

கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும்