வளைகுடா

சவுதி அரேபிய இளவரசர் இந்தியா விஜயம்

(UTV|SAUDI ARABIA) சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் (Mohammed-bin-Salman) 2 நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது, தீவிரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர், முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இந்தநிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் அங்கு பல்வேறு கட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

 

 

Related posts

வளைகுடா அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் தேசியமயமாக்கப்படும் விகிதம் அதிகரிப்பு

சவுதி பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு