வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபிய இளவரசருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இன்று  முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த  எதிர்பார்ப்பதாக தெரிவித்த சவுதி இளவரசர் அந்த முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக வர்த்த சமூகத்தவர்களுடன் தமது நாட்டுக்கு வருகை தருமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் கவரும் காலநிலை, பசுமை சுற்றாடல், வனப்பான கடற்கரைகள், வரலாற்று தளங்கள் போன்றவை சுற்றுலாத்துறையின் ஈர்ப்பை வென்றுள்ளதுடன், இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியா தொன்றுதொட்டே இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவியையும் பாராட்டினார்.

அத்துடன் சவுதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் நான்கு இலட்சம் இலங்கையர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு நல்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவம் சந்திப்பில் கலந்துகொண்டா

Related posts

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் – பிரதமர்