உள்நாடு

சவுக்கு மரங்களை வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 25ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்கு மரங்களை மீட்டுள்ளதுடன் துவிச்சக்கர வண்டிகளும் மீட்க்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பருத்திருத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விரைவில் எதிர்க்கட்சிகளின் புதிய முன்னணி

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!

சவர்க்கார விலை உயர்ந்துள்ளதா?