வகைப்படுத்தப்படாத

சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிசாத் பதியூதீன் ஆகியோரும், அரச-தனியார் துறை நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அரிசி, பருப்பு, சீனி, நெத்தலி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின்மீன் உட்பட எட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியும் சந்தையில் அறிமுகம் செய்யப்படும். தனியார் சுப்பர் மார்க்கட் தொகுதிகள், சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த சலுகை பொதி விற்பனை செய்யப்படும்.
பல்பொருள் அங்காடிகள் ஊடாக சலுகை பொதியை விநியோகிக்க லங்கா சதொச, கார்கில்ஸ் புட்சிற்றி, லாப்ஸ் நிறுவனம், ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் ஆகியவை இணக்கம் தெரிவித்துள்ளன.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

බස් සංගම් වර්ජනයකට සුදානම් වෙයි ?

தேசிய துக்கத்துக்கு இடையில் ரஷியா வணிக வளாக தீ விபத்தில் பலியான குழந்தைகள் உடல் அடக்கம்

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம்