உள்நாடு

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்த வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்று(15) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து தவறுக்கான அபராத கட்டணங்களை 14 நாட்கள் மற்றும் மேலதிக அபராக கட்டணங்களை 28 நாட்களுக்குள் தபால் மற்றும் உபதபால் நிலையங்களில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு மாநகராட்சி போக்குவரத்து பொலிஸ் பிரிவினராலும், பொலிஸ் அவசரகால பதிலளிப்பு பிரிவினராலும் வழங்கப்பட்ட அபராத பத்திரங்களுக்கான கட்டணங்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

editor

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு