கேளிக்கை

‘சலார்’ திரைப்படத்தில் ஜோதிகா

(UTV | இந்தியா) – பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சலார்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து ‘சலார்’ படத்தை இயக்கும் பிரசாந்த் நீல்.
பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் ‘சலார்’ திரைப்படம்.
‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் சகோதரியாக நடிக்கும் ஜோதிகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சினிமாவில் இருந்து. அதன்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜோதிகா கமிட் ஆகி உள்ளதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

கன்னடத்தில் கேஜிஎப் என்கிற பிர்ம்மாண்ட படத்தை இயக்கி, தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டு, பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, அதனை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபாஸிற்கு அக்காவாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிகா ஏற்கனவே நடிகர் கார்த்திக்கிற்கு அக்காவாக ‘தம்பி’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சலார்’ திரைப்படத்தில் ஜோதிகா பிரபாஸ் சகோதரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தாலும் படக்குழுவினர் இன்னும் இந்த தகவலிற்கு மறுப்போ, சம்மதமோ தெரிவிக்கவில்லை. இந்த தகவல் உறுதி செய்யப்பட பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக, ஓடிடி வெளியிடாக வந்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஜோதிகா ஒப்பந்தமான திரைப்படங்களும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கிறது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. இதனால் சலார் திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

Related posts

‘ஈஸ்வரன்’ ஆன்லைனில் வெளியானது

பேட்டி தரமாட்டேன் என்று கொந்தளித்த ஆண்ட்ரியா…

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’