உள்நாடுசூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச

முறையான வரி நிர்வாகம், வரி வலையில் சிக்காத தரப்பினரை உள்ளீர்ப்பது, டிஜிட்டல் மயமாக்கல் என அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்யாமல், அரச வருமான இலக்குகளை அடைய அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. தற்போது சர்வதேச நாணய நிதியம் கூறியதாக கூறி, அரசாங்கம் சொத்து வரியை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாடு விழுந்துள்ள பாதாளத்தில் இருந்து வெளியேற வேண்டும். இருந்தபோதும் இந்த ஒப்பந்தம் மக்கள் சார்பான ஒன்றாக அமையும் விதத்தில் மீள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை அரசாங்கமொன்று எமக்குத் தேவையில்லை. சர்வதேச நாணய நிதியத்தை குறித்துக் காட்டி சொத்து வரி விதிப்பது நியாயமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 800 பில்லியன் கடன்கள் இந்நாட்டின் பெரும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தமது நட்புவட்டார நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் பெயர் பட்டியல் இரகசியமானது என கூறி பகிரங்கப்படுத்தாது மறுபுறம், பராட்டே சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு சாதாரண மக்களின் சொத்துக்களை பகிரங்கமாக ஏலம் விட்டு வருகின்றனர். எனவே, கடனை செலுத்தாத தொழில் அதிபர்களிடம் இருந்து நாட்டுக்குச் சேர வேண்டிய தொகையை அறவிடுவதை விடுத்து, சாதாரண மக்களுக்கு சொத்து வரியை விதிப்பது நியாயமற்ற செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தார்

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கான மீற்றர் சட்டம் இம்மாதம் முதல் அமுல்

கந்தகாடு சம்பவம்: முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்